அந்தியூர் தாலுக்கா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டாவது வட்ட மாநாடு

அந்தியூர் தாலுக்கா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டாவது வட்ட மாநாடு
X

மறைந்த முத்த தலைவர் தா. பாண்டியன் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய காட்சி.

அந்தியூரில் தாலுக்கா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டாவது வட்ட மாநாடு நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகில் உள்ள அக்பர் அழி இல்ல வளாகத்தில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டாவது வட்ட மாநாடு நடைபெற்றது. முன்னதாக தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தா.பாண்டியன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூர் வட்டச் செயலாளர் எம்.எஸ் கிருஷ்ணகுமார் வேலை அறிக்கையை வாசித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரும் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினருமான கே சுப்பராயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். இந்த மாநாட்டில் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வி பி குணசேகரன், கட்சி உறுப்பினர்கள் அன்புராஜ், கனகராஜ், தேவராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!