அந்தியூர் அருகே கத்திரிமலை கோவில் பிரச்சனை தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை

அந்தியூர் அருகே கத்திரிமலை கோவில் பிரச்சனை தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை
X

மங்கம்மாள் மகாலட்சுமி கோவில் திருவிழா (பைல் படம்).

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், கத்திரிமலை கோவில் பிரச்சனை சம்பந்தமான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட கத்திரிமலையில் பழங்குடி இனத்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பன்னெடுங்கால தெய்வமாக மங்கம்மாள் மகாலட்சுமி கோவில் இருந்து வருகிறது. மாதம்பட்டி, மலையம்பட்டி, ஈசலாம்பட்டி ஆகிய சிற்றூர் பொதுமக்களுக்கு இக்கோவில் கட்டுப்பட்டது. இந்த கோவிலில் புரட்டாசி, சித்திரை மற்றும் தை மாதத்தில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.

இந்த மூன்று கிராமங்களுக்கும் பொதுவான மங்கம்மாள் மகாலட்சுமி கோவில் புனரமைப்பு மற்றும் திருவிழா நடத்துவதில் மூன்று கிராமங்களுக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து, நேற்று அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில், மூன்று கிராமங்களும் ஐந்து மாதத்திற்கு ஒருமுறை கோவிலில் பூஜை செய்து கொள்ளலாம் என்றும், பொதுவான திருவிழா காலமான சித்திரை, கார்த்திகை, தை மாதங்களில் நடைபெறும் போது மூன்று கிராம மக்களும் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.இதை மூன்று சுற்றூர் பொதுமக்களும் ஒப்புக் கொண்டதுடன், பிரச்சினையில் ஈடுபட மாட்டோம் என உறுதியளித்தனர். தற்போது நடைபெற்று வரும் கோவில் புனரமைப்பு பணிகளை, மூன்று சிற்றூர் பொதுமக்களும் ஒன்று சேர்ந்து செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!