அந்தியூர் ஸ்ரீஅழகுமுத்து மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

அந்தியூர் ஸ்ரீஅழகுமுத்து மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
X

ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் திருவீதி உலா.

தவிட்டுப்பாளையம் ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அந்தியூர் ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅழகு முத்து மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று நடைபெற்றது.

கடந்த 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன், கம்பம் நடப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று நடைபெற்றது.

விழாவில் பெண்கள் மாவிளக்கு எடுத்தும், ஆண்கள் அழகு குத்தியும் ஊர்வலமாக சென்றனர். இவ்விழாவில் அந்தியூர் மற்றும் தவிட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது