அந்தியூர் காவல் நிலையத்தில் தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

அந்தியூர் காவல் நிலையத்தில் தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
X

கைது செய்யப்பட்ட ரங்கசாமி

அந்தியூர் காவல் நிலையத்தில் தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அழகு நகரைச் சேர்ந்த கொமரசாமி மகன் ரங்கசாமி. இவர் கடந்த 23ம் தேதி, அந்தியூரைச் சேர்ந்த ஆசிரியர் நிக்கோலஸ் என்பவர் மீது அந்தியூர் காவல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக இன்று மாலை அந்தியூர் காவல் நிலையத்திற்கு சென்ற ரங்கசாமி, அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் ரமேஷ் என்பவரிடம், நான் கொடுத்த புகாருக்கு முதல் தகவல் அறிக்கை தர முடியாதா என கேட்டார். மேலும் ரங்கசாமி கொடுத்த புகார் மனுவை அவரிடம் கொடுக்க வேண்டும் எனவும், அந்தப் புகார் மனுவை திருத்தி, ஆசிரியர் தன்னை கல்லால் தாக்கியதாக மாற்றி எழுதித் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு தலைமை காவலர் ரமேஷ், புகார் மனுவை தர முடியாது என்று மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த ரங்கசாமி, தலைமைக் காவலர் ரமேசை தரக்குறைவாக திட்டியதுடன், சட்டையை பிடித்து அடிக்க சென்றார். மேலும் தன்னை ரவுடி என கூறிக்கொண்டு, மேஜை மீது இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து, உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தலைமை காவலர் ரமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், ரங்கசாமி மீது, தகாத வார்த்தையால் பேசியது, காவல் நிலையத்தில் பணியிலிருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரங்கசாமி சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்