அந்தியூர் பேரூராட்சியில் மாலை 5 மணி நிலவரப்படி 72 சதவீதம் வாக்குப்பதிவு

அந்தியூர் பேரூராட்சியில் மாலை 5 மணி நிலவரப்படி  72 சதவீதம் வாக்குப்பதிவு
X
அந்தியூர் பேரூராட்சியில் மாலை 5 மணி நிலவரப்படி 72 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 18 ஆயிரத்து 870 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 நிலவரப்படி, ஆண் வாக்காளர்கள் 6 ஆயிரத்து 816 பேரும், பெண் வாக்காளர்கள் 7 ஆயிரத்து 56 பேரும் என மொத்தம் 13 ஆயிரத்து 816 பேர் வாக்களித்துள்ளனர். 72 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்காளித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!