அந்தியூர் பேரூராட்சி திமுக கவுன்சிலருக்கு திடீர் மாரடைப்பு

அந்தியூர் பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் பாண்டியம்மாள்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இதில் 13 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் திகழ்ந்த நிலையில், பேரூராட்சி தலைவராக பாண்டியம்மாள் தேர்ந்தெடுக்கப்படலாம் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று திமுக கட்சித்தலைமை அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவியை கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கவுன்சிலர் பாண்டியம்மாள் மாரடைப்பு ஏற்பட்டு அந்தியூர் தனியார் மருத்துமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனைத்தொடந்து உடல்நிலை மிகவும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அந்தியூர் பகுதியில் திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu