அந்தியூர் பேரூராட்சி 5வது வார்டில் திமுக எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பு

அந்தியூர் பேரூராட்சி 5வது வார்டில் திமுக எம்எல்ஏ  தீவிர வாக்கு சேகரிப்பு
X

அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது எடுத்த படம்

இன்று காலை அந்தியூர் பேரூராட்சி 5வது வார்டில் திமுக எம்எல்ஏ ஏஜி வெங்கடாச்சலம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் 15 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம், திமுக வேட்பாளர்களை ஆதரித்தும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை 15வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் டி எஸ் சண்முகத்தை ஆதரித்து, 15வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதல்வர் தலைமையிலான அரசு சாதனைகளை எடுத்துக்கூறியும், அப்பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாகவும், முதியோர், விதவை உள்ளிட்ட அரசின் உதவித் தொகைகளை பெற்றுத் தருவதாகவும் கூறி பொதுமக்களிடம் ஓட்டு கேட்டார். அப்போது வேட்பாளர் டி எஸ் சண்முகம் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!