அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தீவிர வாக்கு சேகரிப்பு

அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தீவிர வாக்கு சேகரிப்பு
X

அந்தியூர் திமுக எம்.எல்.ஏ - ஏ.ஜி.வெங்கடாசலம், 13வது வார்டு வேட்பாளர் சுகந்தி சிவக்குமாரை ஆதரித்து, 13வது வார்டு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஓட்டு சேகரித்தார்.

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், 13வது வார்டில் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அவ்வகையில், அந்தியூர் பேரூராட்சியின் 13 வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகந்தி சிவகுமார், பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில், அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், 13வது வார்டு வேட்பாளர் சுகந்தி சிவக்குமாரை ஆதரித்து, அரசின் சாதனைகளை கூறி, 13வது வார்டு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஓட்டு சேகரித்தார். அப்போது வேட்பாளர் சுகந்தி, சிவக்குமார் மற்றும் திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் என பலரும் உடன் இருந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future