அந்தியூரில் புதிதாக கட்டப்படும் தரை பாலத்தின் பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

அந்தியூரில் புதிதாக கட்டப்படும் தரை பாலத்தின் பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ
X

சேதமடைந்த சாலையை ஆய்வு செய்யும் எம்எல்ஏ வெங்கடாசலம்.  

அந்தியூர் பேரூராட்சியில் உள்ள சிங்கார வீதியில் சேதமடைந்த சாலையின் பணியை விரைந்து முடிக்க அந்தியூர் எம்எல்ஏ அறிவுறுத்தினார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் உள்ள சிங்கார வீதி- அத்தாணி சாலை சந்திப்பில் மிக மோசமான நிலையில் சாலையில் குழி ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயகரமான சூழல் இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாச்சலத்திற்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில், இன்று சாலையை சீரமைப்பதற்கான பணியும், புதிதாக தரைப்பாலம் கட்டும் பணியையும் துவக்கி வைத்தார். அதிகளவில் வாகன போக்குவரத்து இச்சாலையில் செல்வதால், விரைந்து பணியை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!