டி.என்.பாளையம் ஒன்றியத்தில் ரூ.83.43 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்: துவக்கி வைத்த அந்தியூர் எம்எல்ஏ
டி.என்.பாளையம் ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த போது எடுத்த படம்.
டி.என்.பாளையம் ஒன்றியத்தில் ரூ.83.43 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வொங்கடாசலம் பூமி பூஜை செய்து இன்று (நவ.30) துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமுகை ஊராட்சிப் பகுதிகளில், ரூ.83.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை துவக்கியும், கணக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற ஒரு திட்டப் பணியினை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (நவ.30) திறந்தும் வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம் பெருமுகை ஊராட்சி வரப்பள்ளத்தில் ஐசிஐசி வங்கி அருகில் ரூ.6.37 லட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் அமைத்து குடிநீர் விநியோகத்தல், பட்டாத்தரசி அம்மன் கோயில் அருகில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நிதியிலிருந்து ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டில் சின்டேக்ஸ் டேங்க் அமைத்தல், சஞ்சீவிராயன் கோயில் அருகில் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்தல், சைபன் புதூர் பகுதியில் ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல், சின்னக்காளியூர் பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல் என மொத்தம் ரூ.83.43 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை நடத்தி பணிகளை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கணக்கம்பாளையம் ஊராட்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, சத்தியமங்கலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சவுந்தர், ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன், ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் (பெருமுகை), வெங்கடேஷ் (கணக்கம்பாளையம்) மற்றும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu