அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அந்தியூர் எம்.எல்.ஏ. பங்கேற்பு

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில்  அந்தியூர் எம்.எல்.ஏ. பங்கேற்பு
X

அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் இனிப்பு வழங்கினார்.

சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் பங்கேற்றார்.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் நேற்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி 18வது வார்டில் கொண்டாடப்பட்டது.

இதில் பங்கேற்ற அந்தியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், அங்கு வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர், அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதைத் தொடர்ந்து, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பொதுமக்கள் என பலரும் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி