கோபிசெட்டிபாளையம் அருகே குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம்

கோபிசெட்டிபாளையம் அருகே குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம்
X

பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்த பின்பு, பேசிய அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

கோபி அருகே டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை, அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கம்பாளையத்தில் திமுக சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சியை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் நேற்று தொடங்கி வைத்தார். டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையத்தில் ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் அறக்கட்டளை மூலமாக அரசு போட்டி தேர்வுக் கான இலவச பயிற்சி நேற்று தொடங்கியது.

விழாவிற்கு டி.என். பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன் தலைமை தாங்கினார். பயிற்சியை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்து பேசினார்.இப்பயிற்சியில் கலந்து கலந்து கொண்ட 300 கற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச பயிற்சி கையேட்டினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் சிவபாலன் ஆகியோர் வழங்கினார்.

போட்டி தேர்வு வரை நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், மதிய உணவுடன், போட்டி தேர்விற்கான தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி அளித்து வரும் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, டிஎன்பிஎஸ்சி பயிற்சியாளர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!