பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய அந்தியூர் சந்தை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  களைகட்டிய அந்தியூர் சந்தை
X

அந்தியூர் கால்நடைச் சந்தையில் மாடுகளுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. 

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, அந்தியூர் வார சந்தையில், கால்நடைகளுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

விவசாயத்திற்காக உழைக்கும் கால்நடைகளுக்கு ஆண்டுதோறும், தை மாதம் மாட்டு பொங்கல் விழா கொண்டாடுவது தமிழர் பண்பாடு. மாட்டு பொங்கலன்று உழவுக்கு உயிரூட்டும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி அலங்கார கயிறுகள் மற்றும் மணிகள் கட்டி அலங்கரித்து பொங்கல் வைத்து விழா கொண்டாடுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், இன்று நடைபெற்ற அந்தியூர் வார சந்தையில் வார சந்தையில், கால்நடைகளுக்கு பிரத்யோகமாக தயார் செய்யப்பட்ட வண்ண வண்ண மூக்கு கயிறுகள், தாம்பு கயிறுகள், மணிகள் மற்றும் அலங்கார பொருட்கள் ஏராளமாக விற்பனைக்கு வந்தன.

இவை 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட கால்நடை அலங்கார பொருட்களை, அந்தியூர் சுற்று வட்டார பகுதியிலிருந்து சந்தைக்கு வந்திருந்த விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

Tags

Next Story