அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி தேரோட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி தேரோட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு
X

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் தேரை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வடம் பிடித்து இழுத்த போது எடுத்த படம்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி தேரோட்டத்தில் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தேரை வடம் பிடித்து இழுத்தார்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா கடந்த 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.தொடர்ந்து 21 நாட்கள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடை பெற்ற நிலையில், முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது.இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.இந்நிலையில் இறுதி நிகழ்வான தேரோட்டம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

தேரோட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்திற்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

இன்று மாலை நடைபெற்ற தேரோட்டம் நிகழ்வில், அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ கலந்து கொண்டார். அப்போது எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்திற்கு, பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுடன் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்து சென்றார். இந்த நிகழ்வில் அந்தியூர் பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள், பேரூர் துணைச் செயலாளர் பழனிச்சாமி, பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்துச் சென்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!