அந்தியூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்

அந்தியூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்
X

அந்தியூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்  நடைபெற்ற போது எடுத்த படம்.

அந்தியூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அந்தியூர் ஒன்றியத் தலைவர் அய்யனார் வரவேற்றார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கதிரவன் சாந்த முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் நல்லசாமி தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட துணைத் தலைவர் செந்தில்நாதன் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டரை வழங்கிட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி உள்ளிட்ட மூன்றரை இலட்சம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்சாலைப் பணியாளர்களின் நாற்பத்தொரு மாத பனியில் காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும்.

அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.அந்தியூர் நில வருவாய் ஆய்வாளர் சுதாகர் நன்றி கூறினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர் ரவி உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business