அந்தியூர் நகர போட்டோ & வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்க துவக்க விழா

அந்தியூர் நகர போட்டோ & வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்க துவக்க விழா
X

அந்தியூர் நகர போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் துவக்க விழாவில் குத்து விளக்கு ஏற்றிய போது எடுத்த படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் நகர போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரிமா சங்க கட்டடத்தில், அந்தியூர் நகர போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் துவக்க விழா, நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவர் இ. வெற்றிவேல் அனைவரையும் வரவேற்றார்.

செயலாளர் ரா.ஜெபமாலை பொருளாளர் மா.சீனிவாசன் அமைப்பாளர் அ. தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் சங்கத்தின் தலைவர் குமார் என்கிற அ. லட்சுமணன் தலைமை வகித்து பேசினார்.

தொடர்ந்து முதலாவது பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் சங்கத்தின் விதிமுறைகள், சட்ட திட்டங்கள் ஆகியன பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களை சங்கத் தலைவர் குமார் வழங்கினார். இறுதியில் துணைச் செயலாளர் வேலுசாமி நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஈரோடு பவானி கோபி போட்டோ மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!