/* */

வரும் 26ம் தேதி அந்தியூர் பேரூராட்சி தலைவர் தேர்தல்

அந்தியூர் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது. ஆப்பக்கூடல் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் பதவிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

வரும் 26ம் தேதி அந்தியூர் பேரூராட்சி தலைவர் தேர்தல்
X

அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 4ம் தேதி பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 13 இடங்களிலும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சுயேட்சை வேட்பாளர்கள் தலா 1 இடத்திலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.அந்தியூர் பேரூராட்சி‌ தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து அந்தியூர் பேரூராட்சி, தலைவர் மற்றும் துணைத் தலைவர் மறைமுகத் தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனைத்தொடர்ந்து பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதே போல் ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 5 இடத்திலும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு, பாமக தலா 1 இடத்திலும், அதிமுக 6 இடத்திலும் வெற்றி பெற்றது.இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் தேர்தல் நடந்தது. இதில் அதிமுக சேர்ந்த செல்வி என்பவர் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக 7 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தது.

இதனைத்தொடர்ந்து பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுகவினர் ஓட்டு போட வராததால் பெரும்பான்மையினர் வருகையில்லை என கூறி துணை தலைவர் தேர்தல் ரத்து செய்து ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்தியூர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் ஆப்பக்கூடல் பேரூராட்சி துணை தலைவர் மறைமுக தேர்தல் வரும் 26ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 13 March 2022 12:15 PM GMT

Related News