அந்தியூர் கால்நடை சந்தை: ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தை: ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை
X

கோப்பு படம்.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற கால்நடை சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வார சந்தையில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் கால்நடை சந்தை கூடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரண்டு தினங்களில் கூடிய கால்நடை சந்தைக்கு, அந்தியூர் சுற்று வட்டார மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த விவசாயிகள், வியாபாரிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில், மாட்டினங்கள் சுமார் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 55 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாட்டினங்கள் எட்டாயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!