அந்தியூர் கால்நடை சந்தையில் 70 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் 70 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை
X

கோப்பு படம் 

அந்தியூர் கால்நடை சந்தையில் 70 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடைச் சந்தை நேற்று வழக்கம்போல் கூடியது. அந்தியூர் வெள்ளித்திருப்பூர் அத்தாணி கோபி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் மற்றும் எருமை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இதில் எருமை மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரையிலும், மாடுகள் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தில் 70 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!