அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் துவக்கம்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் துவக்கம்
X

அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி.

அந்தியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்குகிறது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பத்ர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா ஆண்டுதோறும் நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் விழா நடைபெறவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குண்டம் விழா இன்று (17ம் தேதி) மாலை 6 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து அம்மன் வீதி உலா தினமும் நடைபெறுகிறது.

கோவிலில் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா வருகிற 6-ந் தேதி நடை பெறுகிறது. இதைத்தொடர்ந்து 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள் தேரோட்டம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து செல்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகா ரிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story