அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அந்தியூர் பத்ரகாளியம்மன்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மகிஷாசுரவர்தனம் என்னும் எருமைக் கிடாய் பலி கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
திருவிழாவையொட்டி தினந்தோறும் இரவு அம்மனுக்கு பூத வாகனம், நரி வாகனம், சிம்ம வாகனம் அம்ச வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட சிறப்பு அலங்காரம் செய்யபட்டது.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழாவிற்காக நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக அம்மனுக்கு வேப்பமரம் மற்றும் ஊஞ்சல் மரம் ஆகிய விறகுகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர்.
இதன்பின்னர், இன்று அதிகாலையில் பர்கூர் வனப்பகுதியையொட்டியுள்ள சிலம்பூர் அம்மன் ஆலயத்தில் இருந்து அம்மை அழைத்துவரப்பட்டு குண்டத்திற்கு முன்பாக வந்து குதிரை வாக்கு கொடுத்த பின்பு கோவிலின் மிராசுதாரர் வகையராவை சேர்ந்தவர்கள் முதலில் தீ மிதித்து குண்டம் இறங்கும் விழாவை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து அந்தியூர்,கோபி,பர்கூர்,சத்தியமங்கலம்,ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டத்தை சேர்ந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒருவர் பின் ஒருவராக குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி பத்திரகாளி அம்மனை வழிபாடு செய்தனர்.
இன்று காலை 7:35 மணிக்கு துவங்கிய தீமிதி திருவிழாவானது காலை 10.30 மணிக்கு நிறைவு பெற்றது. பக்தர்களின் பாதுகாப்புகாக, பவானி டிஎஸ்பி தலைமையிலான 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu