அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா  பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு
X

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்றுவரும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி, நடைபெற்றுவரும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.இந்நிலையில் அந்தியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி. வெங்கடாச்சலம், இன்று காலை பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும், தகரத்தால் ஆன பந்தல் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் இப்பணியினை மேற்கொண்டுவரும் தொழிலாளர்களிடம், தரமான முறையில் பந்தல் அமைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.இதைத் தொடர்ந்து கோவில் அலுவலகத்திற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர், குண்டம் திருவிழாவின்போது, தீ மிதிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.அப்போது செயல் அலுவலர் சரவணன், ஊழியர்கள் செந்தில்குமார் தணிகாச்சலம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story