அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா: பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

X
பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
By - S.Gokulkrishnan, Reporter |28 March 2022 4:45 PM IST
திருவிழாவையொட்டி, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவானது கடந்த மார்ச் 17ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து 21 நாட்களுக்கு பின், முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் மார்ச் 30ம் தேதி கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், ஏப்ரல் 6ம் தேதி குண்டம் திருவிழா நடக்க உள்ளது. இதற்காக, கோவில் வளாகம் முன், பந்தல் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu