அந்தியூர் பெரிய ஏரி படகுக் குழாம் நவ.26-ம் தேதி திறப்பு
அந்தியூர் பெரிய ஏரி படகுக் குழாமை தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார் என்று அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Erode Today News, Erode Live Updates, Erode News - அந்தியூர் அருகே பெரிய ஏரியில் கட்டப்பட்டுள்ள படகுக் குழாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நவ.26ம் தேதி காலை திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து தொடர்பாக அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை வாரிய உறுப்பினருமான ஏ.ஜி.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின் படியும், தமிழ்நாடு துணை முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படியும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் அந்தியூர் பெரிய ஏரியானது படகு சவாரியுடன் சுற்றுலாத் தலமாக ரூ.50 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், இப்படகு குழாமானது வரும் நவ.26-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
ஆகவே, அந்தியூர் சட்டமன்றத் தொகுதி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu