அந்தியூர் தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்

அந்தியூர் தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்
X

மாற்றுத்திறனாளிகள் மாநில ஆலோசனை வாரிய உறுப்பினர் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் இன்று முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெறுது.

மாற்றுத்திறனாளிகள் மாநில ஆலோசனை வாரிய உறுப்பினர் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று பிரம்மதேசம், வேம்பத்தி ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு பிரம்மதேசம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், வரும் 7ந்தேதி வியாழன் அன்று மைக்கேல்பாளையம், சின்னத்தம்பி பாளையம் பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சின்னத்தம்பிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், வரும் 12ஆம் தேதி பர்கூர் மலைப்பகுதிக்குட்பட்டவர்களுக்கு, பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியிலும், கீழ்வாணி, கூத்தம்பூண்டி பகுதி மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் 14ம் தேதி மூங்கில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பொலவக்காளிபாளையம், நாதிபாளையம் பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு கல்லாங்காட்டுவலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

மேலும் வரும் 19ம்தேதி எண்ணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 20ம்தேதி அம்மாபாளையம், மேவாணி பகுதியினருக்கு மேவாணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், வரும் 26ம்தேதி டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமுகை, கணக்கம்பாளையம், நஞ்சை புளியம்பட்டி பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் நடக்கிறது.வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னம்பட்டி, கொமராயனூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு சென்னம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், 21ம்தேதி மாத்தூர், பட்லூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு பட்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 22ம்தேதி குருவரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு குருவரெட்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இந்த மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவ தேவைகள், ஆதார் திருத்தம், பட்டா வீடு கோரிக்கை, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு கருவிகள், தொழிற்பயிற்சி மற்றும் சுய வேலைவாய்ப்பு குறித்தான கோரிக்கைகள் வழிகாட்டுதல்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!