கோபியில் உள்ள மாவட்ட சிறையில் பிளேடை விழுங்கி கைதி தற்கொலைக்கு முயற்சி

கோபியில் உள்ள மாவட்ட சிறையில் பிளேடை விழுங்கி கைதி தற்கொலைக்கு முயற்சி
X

கோபி மாவட்ட சிறை.

ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் கைதி பிளேடை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கோபியில் உள்ள மாவட்ட சிறையில் கைதி பிளேடை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி கச்சேரிமேட்டில் மாவட்ட சிறை உள்ளது. இங்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு கைதிகளிடம் இருந்து கஞ்சா, செல்போன், பேட்டரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக, கைதிகள் பாபுராஜ் (வயது 28), விவேக் என்கிற கிட்டு என்கிற வெள்ளையன் (வயது 28) ஆகிய இருவர் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளார்.

இந்நிலையில், நேற்று (டிச.13) கைதி விவேக் திடீரென பிளேடை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறை காவலர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு கைதி விவேக் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். கோபி மாவட்ட சிறையில் கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business