பவானி: அம்மாபேட்டை அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

பவானி: அம்மாபேட்டை அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
X

பூபாலன்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே நண்பர்கள் இறந்த துக்கம் தாங்காமல் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே நண்பர்கள் இறந்த துக்கம் தாங்காமல் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் காந்திநகரை சேர்ந்தவர் மூர்த்தி. அவருடைய மனைவி ஜெயம்மாள். இவர்களுடைய மகன் பூபாலன் (வயது 28). என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் குருவரெட்டியூரில் உள்ள இரு சக்கர வாகன ஷோரூமில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார்.

இவரது நெருங்கிய நண்பர்கள் பாபு மற்றும் கவின். இவர்கள் கடந்த ஜனவரி மாதம் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்து விட்டனர். நண்பர்கள் இறந்த துக்கத்ததை பூபாலனால் தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று காலை 7.30 மணி அளவில் பூபாலன் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது, அவர் அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், வெளியே சென்றுவிட்டு ஜெயம்மாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

பூபாலன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பூபாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் , இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story