தாளவாடியில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்!

தாளவாடியில் மின்வாரிய ஊழியர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைக்கிராமத்துக்கு உட்பட்ட பாரதிபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் மின்பழுது ஏற்பட்டது. இந்த பழுதை நீக்குவதற்காக விவசாயிடம் இருந்து மின் கம்பியாளர் மணிகண்டன் ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளார்.
பின்னர், ரூ.1,000 லஞ்சமாக பெற்றுக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர் மீது மின்சார வாரிய அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், வீடியோ காட்சியின் உண்மை தன்மை ஆராயப்பட்டதில், மணிகண்டன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கான உத்தரவை தாளவாடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயராகவன் பிறப்பித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu