ஈரோடு ஆட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு மாவீரன் பொல்லான் பெயர் சூட்டக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சமூகநீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவையினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஈடுபட்ட போது எடுத்த படம்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் மாளிகை என பெயர் சூட்டக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்திற்கு சுதந்திரப் போராட்ட மாவீரன் பொல்லான் பெயரை சூட்டக் கோரி, இன்று (டிச.16) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூகநீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவையினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சமூகநீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக பழைய கட்டிடத்திற்கு தீரன் சின்னமலை மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதேபோல், தற்போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 மாடி கட்டிடத்திற்கு மாவீரன் பொல்லான் மாளிகை என பெயர் சூட்ட வேண்டும். இதற்கான அறிவிப்பை டிசம்பர் 20ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மாவீரன் பொல்லான் நினைவு அரங்க அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வர் அறிவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆதித்தமிழர் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் ஈரோடு வீரக்குமார், அறம் மக்கள் கட்சி தலைவர் கரூர் காமராஜ், திராவிட எழுச்சி பேரவை தலைவர் சக்திவேந்தன், அருந்ததியர் விடுதலை முன்னணி தலைவர் என்டிஆர், இந்திய கன சங்கம் கட்சி துணைத் தலைவர் துரைசாமி, தமிழக தொழிலாளர் கட்சி தலைவர் மாகாளியப்பன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தினகரன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட நிர்வாகி சலீம், ஜெய்பீம் மக்கள் கட்சி தலைவர் அறிவழகன், மதுரைவீரன் மக்கள் விடுதலை இயக்க தலைவர் ஆறுமுகம், சமூகநீதி மக்கள் கட்சி துணைத் தலைவர் ஆறுமுகம், மாவீரன் பொல்லான் பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், மாவீரன் பொல்லான் வரலாறு மீட்பு குழுவினர் சதீஷ், பாபு, கண்ணையன், மூர்த்தி, சசிகுமார் ஆகியோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu