அனைத்து குறைதீர் கூட்டங்களும் வழக்கம்போல் நடைபெறும் - ஈரோடு மாவட்ட ஆட்சியர்!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி (பைல் படம்).
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இதர குறைதீர்க்கும் முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதிருந்த நிலையில், நாளை 06.03.2023 முதல் மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி அறிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 18ம் தேதி வெளியான தேர்தல் அறிவிப்பு காரணமாக இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் இந்த ஏற்பாடு. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டது. இதனால் வரும் திங்கள் கிழமை முதல் மக்கள் குறைதீர் கூட்டங்கள் அனைத்தும் வழக்கம்போல நடைபெறும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
ஈரோடு மாவட்டம், ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கு 27.02.2023 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் 18.01.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டதால், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும்; மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் அனைத்து குறைதீர்க்கும் கூட்டங்களும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது, 04.03.2022 அன்று தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்படுவதால், 06.03.2023 முதல் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மற்றும் அனைத்து குறைத்தீர்க்கும் கூட்டங்களும் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu