வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கோட்டையை பிடிக்கும்: முன்னாள் அமைச்சர் பேச்சு

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கோட்டையை பிடிக்கும்: முன்னாள் அமைச்சர் பேச்சு
X

அத்தாணி மார்க்கெட் திடலில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஓ.செங்கோட்டையன் பேசிய போது எடுத்த படம்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கோட்டையை பிடிக்கும் என அத்தாணியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்தாணியில் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கோபி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய அவர், ஈபிஎஸ், ஓபிஎஸ் என்று சொன்னார்கள் ஈபிஎஸ் தான் வென்று காட்டினார் எனவும், உயர்நீதிமன்ற தீர்ப்பும், உச்ச நீதிமன்ற தீர்ப்பும் சாதகமாக உள்ளது என்றும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றதும் ஏரி குளங்களை தூர் வாரியதுடன் மனிதநேயத்துயடன் திட்டங்களை நிறைவேற்றினார் என்றார்.

மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்து, முதல்வராக எடப்பாடி பழனிசாமி அமருவார் என்றும் கூறினார்.

இக்கூட்டத்தில் நகர, ஒன்றிய, மாவட்ட, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.பொதுக் கூட்டத்தில் அந்தியூர் அருகே உள்ள வள்ளலார்புரத்தைச் சேர்ந்த பிஜேபி அந்தியூர் ஒன்றிய செயலாளர் பாலாஜி என்கிற பாலமுருகன், அக்கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அதிமுகவில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன் முன்னிலையில் இணைத்துக் கொண்டார். கட்சியில் இணைந்த பாலாஜி என்கிற பாலமுருகனுக்கு சால்வை போர்த்தி செங்கோட்டையின் வரவேற்று வாழ்த்தினார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்