தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சி- கே.ஏ. செங்கோட்டையன் பேச்சு

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சி- கே.ஏ. செங்கோட்டையன் பேச்சு
X

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான அரசு அமையும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாணவரணி சார்பில், மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் குருராஜ் தலைமை வகித்தார்.நகரச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

அ.ம.மு.க, பா.ம.க, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 200 க்கு மேற்பட்ட இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.முன்னதாக விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மாணவர்களின் எதிர்கால நலனை கொண்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றினோம் என்றும், வளர்ந்து வரும் தமிழ்நாட்டில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வர வேண்டுமோ அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்த பெருமை அ.தி.மு.க. அரசுக்கு உள்ளது என்றும் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், எதிர் காலத்தில் தமிழகத்தை பொறுத்த வரை அடுத்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் அமரும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் சண்முகானந்தம், நகர அம்மா பேரவை செயலாளர் பாலுசாமி, பேரவை செயலாளர் கிருஷ்ணன், நகர இளைஞரணி செயலாளர் மோகன், அந்தியூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் தேவராஜ், எம்.ஜி.ஆர். மன்ற வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!