காவிரி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட அம்மாபேட்டை அதிமுக நிர்வாகி

காவிரி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட அம்மாபேட்டை அதிமுக நிர்வாகி
X

முனியகவுண்டர்.

அம்மாபேட்டை 15வது வார்டு அதிமுக செயலாளர் 2 நாட்களுக்கு பிறகு காவிரி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை 15-வது வார்டு அதிமுக செயலாளராக இருப்பவர் மங்கனன் என்கிற முனியகவுண்டர் (வயது 64). இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வேலையை முடித்து பாரதியார் வீதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கி உள்ளார்.

சிறிது தூரம் சென்றதும் திடீரென கூச்சலிட்டுள்ளார். உடனே பக்கத்தினர் அக்கம் வந்து பார்க்கையில் திடீரென சத்தம் கேட்கவில்லை. அதன் பின் காவிரி ஆற்றில் பொதுமக்கள் தேடினர். பிறகு அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தியூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜேசுதாஸ்தலைமையில் நேற்று முழுவதும் தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் பரிசல் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அவரது உடல் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால், 2-வது நாளாக இன்று முனியகவுண்டரின் உடலை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில் அம்மாபேட்டை ஈஸ்வரன் கோவில் படித்துறை அருகே முனியக்கவுண்டர் உடல் பிணமாக மிதந்து வந்தது.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!