பவானி நகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பவானி நகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
X

பவானி நகராட்சியில் கருப்பு பட்டை அணிந்து வெளிநடப்பு செய்த அதிமுக கவுன்சிலர்கள்.

பவானி நகராட்சி சொத்து வரி உயர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு பட்டை அணிந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பு மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மத்திய அரசின் அறிவுறுத்தல் பேரில் உள்ளாட்சி துறை சொத்து வரி உயர் செய்யப்பட்டது. இதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி அலுவலகத்தில் சொத்து வரி தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. நகரமன்ற தலைவர் சித்தூரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கருப்பு பட்டை அணிந்த அதிமுக கவுன்சிலர்கள் 5பேர் உட்பட 27பேர் பங்கேற்றனர்.

இதில் நகராட்சியில் சொத்து உயர் குறித்து கவுன்சிலர்கள் மத்தியில் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அதிமுக கவுன்சிலர்கள் தமிழக அரசின் 25சதவீதம் முதல் 100சதவீதம் வரையிலான சொத்து உயர்வால் பொதுமக்கள் அதிக அளவில் நெருக்கடிக்கு உள்ளவர்கள் என தெரிவித்தனர். இருப்பினும், சொத்து வரி உயர்த்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்த அதிமுக கவுன்சிலர்கள் 5பேர் வெளிநடப்பு செய்தனர். மேலும் தமிழக அரசு சொத்து வரி உயர்வை திரும்பெறக்கோரி நகராட்சி அலுவலகம் அதிமுக கவுன்சிலர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself