கோபி நகர்மன்ற தலைவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டத்தில் நடந்த சாதாரண கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் நாகராஜிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு அளித்து விட்டு வெளிநடப்பு செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற தலைவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகர்மன்ற கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நகராட்சியில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானங்கள் மன்ற உறுப்பினர்களின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
இதில், தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட தினசரி சந்தை வளாகத்தில் கூடுதலாக உள்ள பணிகளை முடிப்பதற்கு நிதி ஒதுக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எதிர்த்து அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் நகர்மன்ற தலைவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, எதிர்கட்சித் தலைவர் ப்ரிணியோ கணேஷ் தலைமையிலான அதிமுக கவுன்சிலர்கள் தினசரி சந்தை வளாகத்தின் பாதுகாப்பு குறித்தும் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு செய்ய வல்லுனர் குழுவினை அமைக்க வேண்டும்.
மேலும், கட்டிடத்தின் உள்ளே வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்த பின்னரே கடைகளை வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்று நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை மனுவினை அளித்து விட்டு, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்தப் புறக்கணிப்பு போராட்டம் குறித்து அதிமுக கவுன்சிலர் பர்ணியோ கணேஷ் கூறியதாவது, கோபி நகராட்சியின் சார்பில் சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தினசரி சந்தை வளாகம் தற்போது வரை பணிகள் முழுமையடையாத காரணத்தால் வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.
மேலும், வளாகத்தின் உள்ளே வரும் பொதுமக்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும் தரமற்ற வகையிலும் கட்டிடத்தை கட்டுவதற்கு காரணமாக இருந்த கோபி நகர்மன்ற தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று அதிமுக உறுப்பினர்கள் சார்பில் வலியுறுத்துவதாக கூறினார்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu