கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் தர்ணா

கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் தர்ணா
X

தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 12வது வார்டு அதிமுக கவுன்சிலர் சுமையாபானு.

கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் அவசர கூட்டம் நகராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில், நகராட்சி செயற்பொறியாளர் சுப்பிரமணி முன்னிலையில் தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும் 12 வார்டு அதிமுக கவுன்சிலர் சுமையாபானு, நகராட்சி தலைவர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது வார்டுக்கு உட்பட்ட சி.கே.எஸ்.நகரில் கடந்த பத்து நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்ய நகராட்சி ஆணையாளரிடம் கூறி, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் நின்றனர். அதனைத்தொடர்ந்து, வார்டில் உள்ள பிரச்சினைகளை நகராட்சி தலைவர் என்ற முறையில் தெரிவித்தால் உடனடி யாக பாரபட்சமின்றி அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடைபெறும் என்று நகராட்சி தலைவர் நாகராஜ் தெரிவித்தார். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் போராட்டத்தை கைவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்