நெல் பயிரை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டுகோள்

நெல் பயிரை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டுகோள்
X

பைல் படம்.

நெல் பயிரை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வேளாண்மை அதிகாரி தகவல்.

கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் தற்போது 7 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் அதிகமாக நெல் பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பருவத்திலும், தூர்கட்டும் பருவத்திலும் இப்பயிர்களில் ஆங்காங்கே பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அறிகுறிகள் தென்படுகிறகிது. தற்போது வடகிழக்கு பருவமழை காலமாக இருப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தீவிரம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே, விவசாயிகள் விழிப்புடன் தங்களது வயல்களை கண்காணிக்கவும், முன் எச்சரிக்கையுடன் இருக்கவும் அனைத்து பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை கடைபிடிக்கவும், கட்டுப்படுத்தவும் வேண்டும். இந்த தகவலை கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவா தயாளன் கூறியுள்ளார்.

Tags

Next Story
future of ai in retail