/* */

அந்தியூர் விற்பனைக்கூடத்தில் ரூ.7.86 லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.7.86 லட்சத்துக்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

HIGHLIGHTS

அந்தியூர் விற்பனைக்கூடத்தில் ரூ.7.86 லட்சத்துக்கு விற்பனை
X
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் (பைல் படம்)

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து விவசாயிகள் 6616 தேங்காய்கள் கொண்டு வந்தனர்.

இதில், குறைந்த விலையாக 5 ரூபாய் 01 பைசாவிற்கும், அதிக விலையாக 16 ரூபாய் 71 பைசாவிற்கும், 35 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 85 ரூபாய் 09 பைசா முதல் 89 ரூபாய் 89 பைசா வரையிலும், இரண்டு மூட்டை எள் கிலோ 108 ரூபாய் 69 பைசாவிற்கும், 83 மூட்டைகள் துவரை கிலோ 65 ரூபாய் 89 பைசாவிற்கும், 11 மூட்டை பாசிப்பயறு கிலோ 91 ரூபாய் 95 பைசாவிற்கும் ஏலம் போயின.

மேலும், 2 மூட்டை தட்டைபயிறு கிலோ 73 ரூபாய் 69 பைசாவிற்கும், 8 மூட்டை உளுந்து கிலோ 66 ரூபாய் 20 பைசாவிற்கும், 10 மூட்டை நரிப்பயிறு கிலோ 82 ரூபாய் 29 பைசாவிற்கும் விற்பனையாகின. மொத்தம் 149 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள், 7 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாகவும், 120 விவசாயிகள் பங்கேற்றதாகவும் விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 31 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...