அம்மாபேட்டையில் விவசாய விளைபொருட்கள் ரூ.6.50 லட்சத்துக்கு விற்பனை

அம்மாபேட்டையில் விவசாய விளைபொருட்கள் ரூ.6.50 லட்சத்துக்கு விற்பனை
X

பைல் படம்.

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடந்தது. ஏலத்துக்கு தேங்காய் 2 ஆயிரத்து 389 கொண்டு வரப்பட்டன. இதில் சிறிய தேங்காய் ஒன்று 8ரூபாய் 79காசுக்கும், பெரிய தேங்காய் ஒன்று 16 ரூபாய் 10 காசுக்கும் என மொத்தம் 23ஆயிரத்து 781 ரூபாய்க்கு தேங்காய் விற்பனையானது. கொப்பரை தேங்காய் 16 மூட்டைகள் ஏலத்துக்கு வந்தன. இது (குவிண்டால்) ரூ.9 ஆயிரத்து 569 முதல் ரூ.10ஆயிரத்து 69 வரையும் என மொத்தம் ரூ.39 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது.

நிலக்கடலை 179 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 419 முதல் ரூ.7ஆயிரத்து 7 வரை என மொத்தம் ரூ.4 லட்சத்து 29ஆயிரத்து 856-க்கு விற்பனையானது. நெல் 87மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.1,078 க்கும், அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்து 54-க்கும் என மொத்தம் ரூ.95ஆயிரத்து 354-க்கு விற்பனையானது. எள் 15 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) குறைந்தபட்ச மாக ரூ.8 ஆயிரத்து 396-க்கும், அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 989-க்கும் என மொத்தம் ரூ.61ஆயிரத்து 181-க்கு ஏலம் போனது. விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்து 92-க்கு விற்பனை செய்யப்பட்டது..

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!