அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.41 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.41 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
X
பைல் படம்.
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.4.41 லட்சத்துக்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்த 6,545 தேங்காய்கள், குறைந்த விலையாக 5 ரூபாய் 57 பைசாவிற்கும், அதிக விலையாக 16 ரூபாய் 27 பைசாவிற்கும், 53 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 76 ரூபாய் 69 பைசா முதல் 90 ரூபாய் 91 பைசா வரையிலும், மூன்று மூட்டை அவரை கிலோ 57 ரூபாய் 75 பைசாவிற்கும், ஒரு மூட்டை கொள்ளு கிலோ 39 ரூபாய் 10 பைசாவிற்கும், 14 மூட்டை பாசிப்பயறு கிலோ 96 ரூபாய் 59 பைசாவிற்கும், 3 மூட்டை தட்டைபயிறு கிலோ 88 ரூபாய் 10 பைசாவிற்கும், 24 மூட்டை நரிப்பயிறு கிலோ 90 ரூபாய் 18 பைசாவிற்கும் விற்பனையானது. மொத்தம் 91.99 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 4 லட்சத்து 41 ஆயிரத்து 257 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாகவும், 111 விவசாயிகள் பங்கேற்றதாகவும் விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!