அந்தியூரில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் வாக்களித்தார்

அந்தியூரில்  சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் வாக்களித்தார்
X

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் குடும்பத்தினருடன் வாக்காளித்த பின்பு எடுத்த படம்

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் அந்தியூர் கிழக்கு பள்ளி வாக்குச்சாவடியில் தனது மனைவி மற்றும் மகனுடன் வந்து வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்கு பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்தியூர் பேரூராட்சியில் உள்ள 22 வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அவ்வகையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள, 9வது வார்டுக்கான வாக்குச்சாவடி மையத்தில், தனது மனைவி மற்றும் மகனுடன் வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினார்.

Tags

Next Story