பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி 11 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை

பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி 11 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை
X

பைல் படம்.

தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 11 பவுன் நகை, 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கொங்குநகரை சேர்ந்தவர் கார்த்திக். ஜவுளி வியாபாரி. வேலை தொடர்பாக வெளியே சென்ற கார்த்திக் வீட்டில், அவரது மனைவி மல்லிகா தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டினுள் நுழைந்து மல்லிகாவிடம் கத்தியை காட்டி மிரட்டி 11 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுகுறித்து மல்லிகா பெருந்துறை போலீசாருக்கு புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விசாரணை நடத்தினர். இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!