ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு ஜனவரி இறுதியில் இடைத்தேர்தல்.?: 3வது முறையாக வாக்களிக்க தயாராகும் வாக்காளர்கள்

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு ஜனவரி இறுதியில் இடைத்தேர்தல்.?: 3வது முறையாக வாக்களிக்க தயாராகும் வாக்காளர்கள்
X

ஈரோடு கிழக்குத் தொகுதி வரைபடம்.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவையடுத்து அத்தொகுதிக்கு ஜனவரி இறுதியில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவையடுத்து அத்தொகுதிக்கு ஜனவரி இறுதியில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் 14ம் தேதி காலை மரணம் அடைந்தார்.

அவரது மறைவை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 2வது முறையாக இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இன்னும் ஓரிரு வாரத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக முறைப்படி சட்டசபை செயலகம் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான கடிதம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் கடந்த 4 ஆண்டுகளில் 3வது முறையாக வாக்களிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

டெல்லி சட்டசபை தேர்தல் ஜனவரி இறுதியில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் போது ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான அறிவிப்பும் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
இரவு உணவுக்குப் பின் உடல் எடை குறைக்க இந்த 5 செயல்களை தினமும் செய்யுங்கள்!