50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்கள்

50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்கள்
X

50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

50 ஆண்டுகளுக்குப் பின் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி பொருளாதார மாணவர்கள் சந்திப்பு கோல்டன் ஜூப்ளி விழா கொண்டாடப்பட்டது.

50 ஆண்டுகளுக்குப் பின் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி பொருளாதார மாணவர்கள் சந்திப்பு கோல்டன் ஜூப்ளி விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன் 1974-77 கல்வி ஆண்டுகளில் படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பின் கல்லூரி வந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கோல்டன் ஜூப்ளி விழாவை கொண்டாடினர். அனைவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

இந்த கோல்டன் ஜூப்ளி விழாவிற்கு கல்லூரி முதல்வர் கமலக்கண்ணன் தலைமையேற்று பழைய மாணவர்களை வாழ்த்திப் பேசினார். கல்லூரி முதல்வர், முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் நினைவுப் பரிசை வழங்கினார். முன்னாள் மாணவர்கள் கல்லூரி முதல்வரையும், பொருளாதாரத் துறை பேராசிரியர்களையும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். நினைவு பரிசாக பீரோ மற்றும் பிரிண்டர் ஒன்றும் கல்லூரிக்கு முன்னாள் மாணவர்கள் அன்பளிப்பாக வழங்கினர் .

விழாவில், கல்லூரியில் பணிபுரியும் பொருளாதார பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அனைத்து முன்னாள் மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு விடை பெற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!