ஈரோடு: 53 பேருக்கு டெங்கு பாதிப்பு

ஈரோடு: 53 பேருக்கு டெங்கு பாதிப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 53 பேருக்கு டெங்கு பாதிப்பு சுகாதார துணை இயக்குநர் தகவல்.

இதுகுறித்து சுகாதார துறை துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்துக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த 69 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை தொற்று எதுவும் இல்லை. அந்தந்த பகுதிக்கு உட்பட்ட செவிலியர்கள், சுகாதாரப் துறையினர் கண்காணித்து வருகின்றனர். பரவல் தடுப்பு பணியை தீவிரப்படுத்தியதால் இதுவரை 53 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். டெங்குவால் உயிரிழப்பு இல்லை.

தொடர்மழையால், சில இடங்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது.தினமும் 20 பேர் வரை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வழங்கப்படுகிறது. சிகிச்சை ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி சிறப்பு வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!