ஈரோடு: ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்

ஈரோடு: ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்
X

கோப்பு படம் 

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் தங்கி படிக்க, மாணவ -மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 29 பள்ளிக்கூட விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும் இயங்கி வருகின்றன. 2021-2022-ம் கல்வி ஆண்டில் படிக்கும் மாணவ -மாணவிகள், தாங்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிக்கு அருகாமையில் உள்ள மேற்கண்ட விடுதிகளில் தங்கிபடிக்க விருப்பம் உள்ளவர்கள், விடுதியில் சேருவதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதி காப்பாளரிடம் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாக அளிக்கப்பட வேண்டும். விடுதியில் சேர்க்கப்படும் மாணவ -மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருப்பதை கட்டாயம் உறுதி செய்து கொள்ள வேண்டும். விண்ணப்ப படிவத்தில் மாணவ-மாணவிகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு அதில் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும்.

விடுதியில் தங்கி படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு கட்டாயமாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு இருக்கவேண்டும். விண்ணப்ப படிவத்தில் ஆதார் கார்டு எண் கட்டாயம் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், விடுதியில் சேர விரும்பும் மாணவ -மாணவிகளுக்கு, விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வருகிற 6-ந்தேதி முதல், சம்மந்தப்பட்ட பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி விடுதிகள் மூலமாக வழங்கப்படும்.

Tags

Next Story