பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம்!

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம்!
X
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி, ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி, ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பிரசித்திபெற்ற சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி சங்கமேஸ்வரர் கோவிலில் தனி சன்னதி கொண்டுள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் திருக் கல்யாணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாமியும், அம்பாள்களும் தேரில் எழுந்தளினார்கள். பின் னர் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். பூக்கடை வீதி, வி.எல்.சி. கார்னர் உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்று கோவிலில் நிலை சேர்ந்தது.

Next Story
ai solutions for small business