அந்தியூரில் ஆதர்ஷ் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் சார்பில் நீர்மோர் பந்தல்

அந்தியூரில் ஆதர்ஷ் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் சார்பில் நீர்மோர் பந்தல்
X

ஆதர்ஷ் கல்வி நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை எம்எல்ஏ ஏ‌.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த போது எடுத்த படம்

திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆதர்ஷ் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் சார்பில் நீர்மோர் வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாளை அதிகாலை 5 மணிக்கு துவங்குகிறது.குண்டம் திருவிழாவில் அந்தியூர் மற்றும் அந்தியூர் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் சார்பில், இன்றும் நாளையும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம், இன்று இரவு நடைபெற்ற நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆதர்ஷ் வித்யாலயா கல்வி நிறுவன அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story