ஊரடங்கில் தேவையில்லாமல் வெளியே சுற்றினால் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

ஊரடங்கில் தேவையில்லாமல் வெளியே சுற்றினால் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை
X

எஸ்பி சசிமோகன்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் நாளை 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டம் முழுவதும் நாளை 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் முழு சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படும். மேலும் பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். பொது இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்