ஈரோடு: சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஈரோடு: சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
X

பைல் படம்.

Independence Day Holiday-ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

Independence Day Holiday- ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சுதந்திர தினமான, நேற்று ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா? அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் தலைமையில் ஆய்வு நடந்தது. மொத்தம் 110 நிறுவனங்களில் ஆய்வு நடந்தது. இதில் 88 நிறுவனங்களில் விடுமுறை அளிக்காத முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. அந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுதந்திர தின விடுமுறை போன்ற அரசு பொது விடுமுறை நாட்களில் பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது சம்பளத்துடன் கூடிய விடுமுறையோ அளிக்க வேண்டும். தவறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!